• #88,89 Sri Ram Nagar, (Opp. Neyveli Arch Gate), Vadakuthu, Tamilnadu
  • 24/7 Emergency
SNS Hospital 24/7 Emergency
SNS Hospital Best Doctors

சிறந்த மருத்துவர்கள்

Committed Care
SNS Hospital IVF Center

FORTIUS IVF

கருத்தரிப்பு மையம்
Helpline : 94444 10811

சினைப்பை நீர்க்கட்டிகள் மற்றும் மலட்டுத்தன்மை (PCOD AND INFERTILITY) – ஒரு உலகத்தரம் வாய்ந்த கலந்தாய்வு.

சினைப்பை நீர்க்கட்டிகள் மற்றும் மலட்டுத்தன்மை (PCOD AND INFERTILITY) – ஒரு உலகத்தரம் வாய்ந்த கலந்தாய்வு.

நீர்க்கட்டி என்று கூறப்படும் PCOD ஒரு உண்மையான கட்டி என்று அதை நினைத்து இக்காலத்து பெண்கள் பயப்படுவதை காண்கிறோம். வெடிக்கப்படாத கருமுட்டைகள் தான் பரவலாக நீர்கட்டி என்று கருதப்படுகிறது. அதனால் அச்சம் கொள்வதை தவிர்க்கவும். எங்களது மருத்துவமனைக்கு வரும் 100 பெண்களில் 50% – 70% பேருக்கு நீர்க்கட்டி இருப்பதை காண்கிறோம். அவர்கள் அனைவரும் ஏதோ வயிற்றில் கட்டி இருப்பதாக பதட்டமாகின்றனர். பெரும்பாலான PCOD முற்றிலுமே குணப்படுத்தக்கூடியவை என்று அறிவுருத்தவும் மேலும் அவர்களின் விழிப்புணர்வுக்காகவே இக்குறிப்பு.
சுமார் 10 to 15% of Women in reproductive age group ( 25 to 40 வரை வயதுடைய பெண்களுக்கு நீர்க்கட்டி (PCOD) இருப்பது ஆய்வுகளில் தெரிந்துள்ளது)
PCOD – னால் வரும் பாதிப்புகள்:
PCOD மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் குழந்தையின்மை (INFERTILITY) மலட்டுத்தன்மை ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. PCOD-னால் உடல் பருமன் அதிகரிப்பு, குழந்தையின்மை,மாதவிடாய் பிரச்சினைகள், முகத்தில் முடி வளருதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
PCOD வருவதற்கான காரணங்கள் :
• மாறுப்பட்ட வாழ்க்கை வழிமுறைகள் (Altered Life Style),
• மாறுப்பட்ட உணவு முறைகள் (Change in Food Pattern),
• தூக்கமின்மை (Sleepnessnes),
• உடல் மற்றும் மனசோர்வு,கவலை (Mental & Physical stress)
• உடம்பில் வெயில் படாமை (Decrees Sunlight Exposure)
நீர்க்கட்டி வராமல் தடுக்க மேற்க்கண்ட வழிமுறைகளை சரி செய்வது அவசியம்.

நீர்க்கட்டி குறைவதற்காண உணவு வழிமுறைகள் (PCOD DIET) :
சாப்பிடக்கூடியவை (Foods to Eat) :

• LOW GLYCEMIC INDEX (GI) diet : தானியங்கள் (Whole Grains), பருப்பு வகைகள் (Legumes),பழங்கள் (Fruits), காய்கறிகள் (Vegetables) மற்றும் குறைந்த (Carbohydrates) உணவுகள்.
• கீரை வகைகள் ,மீன் (Fish)

தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to Avoid) :
• மைதா வகையான உணவு பொருட்கள் ப்ரெட்,கேக்,பன்,பரொட்டா (Maida, Bread,Cakes,Bun,Parotta)
• Fried Foods,Fast Food Items
• Red Meat,Pork

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் (Other Life Style Changes) : 
• உடல் உழைப்பு (Exercise & Increase Physical Activity),
• மனசோர்வின்மை (Behavior & Stratagies,Pshycological well Being),
• மனம் விட்டு பேசுதல் (Social Support Network),
• 7 மணி நேரம் தூங்குதல்,உடல் மற்றும் மனசோர்வடைவதை தடுத்தல் (Get Enough Sleep)

PCOD உடைய பெண்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது PCOD – னால் வரும் பிற்கால விளைவுகளை தவிர்க்கும்.