• #88,89 Sri Ram Nagar, (Opp. Neyveli Arch Gate), Vadakuthu, Tamilnadu
  • 24/7 Emergency
SNS Hospital 24/7 Emergency
SNS Hospital Best Doctors

சிறந்த மருத்துவர்கள்

Committed Care
SNS Hospital IVF Center

FORTIUS IVF

கருத்தரிப்பு மையம்
Helpline : 94444 10811

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (BREAST CANCER AWARENESS,PREVENTION)

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

 

மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடத்தில் அதிகமாகிக் கொண்டு வருகிறது. 2020-ம் ஆண்டில் தோராயமாக 1,00,000 (ஆண்,பெண் இருபாலருக்கும்) மேற்பட்டோர்க்கு வந்திருக்கக் கூடும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் மார்பக புற்றுநோய் பற்றி பெண்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. இன்றைய கருத்துக்கணிப்புப்படி இந்தியாவில் 13,92,000 புற்று நோயாளிகள் என்று புதிதாக கணக்கிடபட்டுள்ளது. இது பரவலாக காணப்படும் முதல் ஐந்து புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடம் பெறுகிறது.

அறிகுறிகள்:

பெரும்பலான மார்பக புற்றுநோய்களின் அறிகுறியாவது

  • மார்பகத்தில் கட்டி.
  • மார்பக காம்புகளிலிருந்து நீர் மற்றும் உதிரம் வடிதல்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம்.அதனால் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதனை (screening) செய்து கொள்வது நல்லது.மார்பில் வலி இப் புற்றுநோய்க்கு அறிகுறி அல்ல.

மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்புடையவர்கள் யார்? யார்?

  1. குடும்பத்தார்க்கு மார்பக,கர்பப்பை,சினைப்பை புற்றுநோய் (Family History of CANCER)
  2. உடல் பருமன் அதிகமாக உடையவர்கள். (OBESITY)
  3. மார்பகத்தில் ஏதேனும் கட்டி உடையவர்கள். (Previous History of Breast Lump)
  4. குடிப்பழக்கம் கொண்டிருப்போர். (Alcolhol)
  5. கதிர்வீச்சுக்கு உட்பட்டோர்.(Radiation)

  மார்பக புற்றுநோய் பரிசோதனைகள்

  • சுய பரிசோதனை.(Self Examination)
  • மருத்துவர் மூலம் பரிசோதனை.
  • மாமோகிராபி (Mamography)
  • 50 முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பெண்மணிகளும் 3 வருடத்திற்க்கு ஒருமுறை இந்த பரிசோதனை செய்து கொள்வது நன்று.

   மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் :

பிள்ளைபேறு மற்றும் நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் ,மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான  எளிய வழிமுறை.(Child Birth and Breast feeding protects from Breast Cancer)

கொழுப்புச்சத்து,கதிர்வீச்சு,குடிபழக்கம் இவைகளிலிருந்து விலகி இருப்பதால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம். (Avoiding Junk Foods ,Radiation Exposure,Alcohol can prevent All Cancers)